சர்கார் வெற்றி அடையுமா ?



சர்க்கார். அது என்ன சர்க்கார் படம் வந்தால் தான் நம் எல்லோருக்கும் தெரிய வரும். இப்பொழுதெல்லாம் விஜய் நடித்த படம் என்றால்  பரபரப்புக்கு பஞ்சமில்லை
உண்மையில் படமெடுப்பது பொழுதுபோக்கிற்காக, என்று பெரும்பாலும் கூறிக்கொள்வார்கள். ஆனால் படம் என்பது ஒருவிதமான வியாபாரம்.  வாங்கிய  துணிமணிகளை விற்பதற்கு டிவியில் விளம்பரம் செய்து விற்பனை செய்கிறார்களோ அதே போன்ற முறைதான் திரைப்படங்களையும் விளம்பரம் செய்து வெளியிட்டு லாபம் சம்பாதித்துக் கொள்கிறார்கள். இப்படங்களை திரைப்படமாக மட்டும் பார்க்காமல் இனி நமது பொது வாழ்விற்காக ஒப்பிட்டுப் பார்ப்பது அவரவர் மனங்களின் தனிப்பட்ட விருப்பம. தன்னால் எதுவும் செய்ய இயலாது என்ற ஒருவரின் உச்சக்கட்ட கோபத்தின்  தாக்கம் தான் இந்த திரைப்படம். ஒருவரின் உச்சபட்ச ஆசை  தான் இந்த திரைப் படங்கள். நாம் நம்மால் முயன்ற நல்லதை இந்த நாட்டிற்கு  செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். 
அது போல் ஒரு கதைதான் விஜய் நடிக்கும் சர்க்கார் கூட

ஒரு மாணவன் எப்படி இருந்தால் நல்லது. ஒரு ஆசிரியர் இப்படி இருந்தால் நல்லது. .ஒரு உலகம் இப்படி இருந்தால் நல்லது என்று ஒவ்வொருவரின் ஆசையும் ஒவ்வொருவரின் விருப்பத்தையும் நிறைவேற்ற முடியுமா முடியாத என்ற ஒரு கற்பனை களம்  தான் திரையரங்குகள். 
அப்படிப்பட்ட திரைப்படத்தில்  நடித்து நடித்து மக்கள் மனதோடு ஒன்றி பெரும்பாலும் இளைஞர்களின் மனங்களில்  நிற்கிறார் விஜய். 
ஒன்று சொன்னால் அது பட்டிதொட்டி எல்லாம் பறக்கும் விமர்சனத்துக்குள்ளாகும் என்ற ஒரு இடத்தை அவர் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
ஏன் இந்த வளர்ச்சிக்கு பெரும்பாலும்  இயக்குனர்கள் துணையாக நின்றாலும்இசையமைப்பாளர்கள் துணையாக என்றாலும் தனது  நிலைப்பாட்டில் சற்றும் தயங்காமல் முன்னேறி  கொண்டு போகிறவர் விஜய்
விஜய் நடித்த துப்பாக்கி படம் யாராலும் மறக்க முடியாத ஒரு திரைப்படமாக   தீபாவளிக்கு வெளிவந்து பட்டிதொட்டியெல்லாம் கொடி கட்டி பறக்கும்  ஒரு திரைப்படமாக அமைந்தது. அதேபோன்ற ஒரு கலவையாக சர்க்கார் அமைந்து விடக் கூடாதா என்று இயங்குகின்றனர் அவர் ரசிகர்கள். 
பெரும்பாலும் முருகதாஸ் என்றாலே சூடான அழகான திரைக்கதையை மிகவும் வலுவாக அமைத்து கொடுப்பார்.  கத்தி துப்பாக்கி இரண்டுமே வெற்றி பெற்றது. சன் பிக்சர்ஸ் என்றாலே விளம்பரத்திற்கு பஞ்சம் இருக்காது. ரகுமான் என்றால் அது ஒரு சிறப்பு. முருகதாஸ் என்றால் ஒரு கம்பீரம் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு படமாக உருவாகி உள்ளது. டீசர் வெளியிட்ட ஒன்றிரண்டு மணி நேரத்தில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. நாளுக்கு நாள் விஜய் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர் என்பதையே வெளிப்படுத்துகிறது. நாளுக்கு நாள் முருகதாஸ் என்றால் ஒரு எதிர்பார்ப்பு என்பது வெளிப்படுகிறது. என்ன பேசினாலும் அரசியலாக பார்க்கப்படும் இத்தருணத்தில் துணிந்து நின்று சர்க்கார் என்று டைட்டில் வைத்து படத்தை வெளியிடுகிறார். முருகதாஸ் இந்த  சமூகத்தின்மீது என்ன கோபத்தில் உள்ளார் இந்த  சமூகத்தில் மற்ற வேண்டிய செயல்கள் என்ன என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த சர்க்கார் அமையும் என்று எதிர்பார்க்கலாம். கதை இதுதான் வந்து பாருங்கள் என்று தைரியமாக கூறி டீஸரை வெளியிடும் முருகதாஸ். அவருடைய தைரியத்தில் இந்த படத்தின் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. மீண்டும் ஒரு மாபெரும் தீபாவளியை கொண்டாட  ரசிகர்கள் தயாராக உள்ளனர. மெர்சல் படத்தினை போன்று  இது ஒரு மாபெரும் வெற்றி படமாக அமையும் என்பதில்  ஐயமும் இல்லை


Sargar Teaser

Comments

Popular posts from this blog